வோக்கார்ட் லிமிடெட் முதல் காலாண்டு லாபம் ரூ. 107 கோடி!
வலுவான வருவாய் வளர்ச்சி காரணமாக, வோக்கார்ட் லிமிடெட் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபமாக ரூ. 107 கோடி ஈட்டியது.
புதுதில்லி: முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான வோக்கார்ட் லிமிடெட், வலுவான வருவாய் வளர்ச்சி காரணமாக, ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில், வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபமாக ரூ. 107 கோடி ஈட்டியது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 108 கோடி இழப்பைச் சந்தித்திருந்ததாக நிறுவனம் தெரிவித்தது.
முதல் காலாண்டில் அதன் செயல்பாடுகள் மூலம் அதன் ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 929 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 738 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
ஆய்வுக்கு உட்பட்ட காலாண்டில் மொத்தச் செலவுகள் ரூ. 844 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 770 கோடியை விட அதிகம் என்றது.
Wockhardt Ltd on Monday reported a consolidated profit after tax of Rs 107 crore for the first quarter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.