மும்பையில் ஜிபிஎஸ் நோய்க்கு முதல் பலி!
புணேவில் பரவி வரும் ஜிபிஎஸ் நோய்க்கு மும்பையில் முதல் மரணம்..
மும்பையில் ஜிபிஎஸ் நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இது மும்பையில் பதிவான முதல் இறப்பாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே சிண்ட்ரோம் நோய்த் தொற்று பரவி வருகின்றது. மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆராக்கியமான செல்களை தாக்குவதால் இந்த நோய் ஆட்டோ இம்யூன் என அழைக்கப்படுகிறது. இந்த நோயின் ஒருவகை தான் ஜிபிஎஸ் ஆகும். இந்த நோயானது தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் மும்பையில் ஜிபிஎஸ் நோய்க்கு முதல் இறப்பு பதிவாகியுள்ளன. வடலா பகுதியில் வசிக்கும் அவர், ஒரு மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வருகிறார். 53 வயதுள்ள இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புணேவுக்குச் சென்று அங்கு ஜிபிஎஸ் பரவியதாக அவர் தெரிவித்தார். ஜனவரி 23 அன்று இங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பல நாள்களாக ஆபத்தான நிலையில் இருந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
புணேவில் இன்று காலை நிலவரப்படி, கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.