முகப்பு
இந்தியா

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 28 பிப்ரவரி 2025, 5:12 pm IST
மணிப்பூர். - கோப்புப் படம்
பகிர்:

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மைதேயின் புனிதத் தலமான கோங்பா மருவுக்கு பக்தர்கள் குழு ஒன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் சென்றபோது, ​​இந்த சம்பவம் நடந்துள்ளது. அருகில் உள்ள மலைகளில் இருந்து மொத்தம் 7 முறை சுடப்பட்டதாகவும், ஆனால் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீதிக்கு வந்து வாகனப் போக்குவரத்தைத் தடுத்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Advertisement

Advertisement

மணிப்பூர்: ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு!

முன்னதாக மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மைதேயி - குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே கடந்த 2023 மே 3 ஆம் தேதி ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக வெடித்தது.

சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் 250-க்கும் அதிகமானோர் பலியாகினர். வீடுகளை அடித்து நொறுக்குவது, பெண்கள் மீதான பாலியல் சம்பவங்கள் என மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளாகவே அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதையடுத்து மாநிலத்தில் கடந்த பிப். 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments