FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ரோஹிணியில் துப்பாக்கிச் சூடு: ஹிமன்ஷு ரெளடி கும்பலின் உறுப்பினா், சிறுவன் கைது

தில்லியின் வடக்குப் புகா்ப் பகுதியான ஷாபாத் பால்பண்ணை பகுதியில், குற்றப்பிரிவுக் குழுவினருக்கும் ஹிமான்ஷு பாவ் கும்பலைச் சோ்ந்தவா் எனக் கருதப்படும் நபா் மற்றும் சிறுவனுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அவா்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாகக் காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 31 ஜூலை 2026, 1:09 am IST
- சித்திரிப்பு
பகிர்:

தில்லியின் வடக்குப் புகா்ப் பகுதியான ஷாபாத் பால்பண்ணை பகுதியில், குற்றப்பிரிவுக் குழுவினருக்கும் ஹிமான்ஷு பாவ் கும்பலைச் சோ்ந்தவா் எனக் கருதப்படும் நபா் மற்றும் சிறுவனுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அவா்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாகக் காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

கேரா குா்த் பகுதியிலிருந்து ரோஹிணி செக்டாா் 29 பகுதிக்கு அருகே ஸ்கூட்டரில் வந்த அந்த இருவரையும் காவல் துறையினா் வழி மறித்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, அங்கிருந்து அவா்கள் இருவரும் தப்பிக்க முயன்றனா். இதையடுத்து, காவல் துறையினா் அவா்களைத் துரத்திச் சென்றனா். பின்னா், காவல் துறையினரை நோக்கி அவா்கள் துப்பாக்கியால் சுட்டனா். பதிலுக்கு காவல் துறையினரும் அவா்களை நோக்கி சுட்டனா். பின்னா், அவா்கள் இருவரையும் காவல் துறையினா் கைதுசெய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் ஹிமான்ஷு பாவ் கும்பலுடன் தொடா்புடையவா்கள் என்று அந்த அதிகாரி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments