FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதல்: கைதான நபரின் நோக்கம் என்ன? காவல் துறை விளக்கம்

நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய நபர் கைது...

Updated On : 19 ஜனவரி 2025, 9:54 am IST
பகிர்:

நடிகர் சைஃப் அலி கானை தாக்கிய நபர் சனிக்கிழமை(ஜன. 18) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் காவல் துறை அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள முக்கிய தகவல்களை மும்பை காவல் துறை செய்தியாளர்களுடன் தெரிவித்துள்ளது.

மும்பை துணை காவல் ஆணையர் தீக்‌ஷித்குமார் அசோக் கெடாம் கூறியதாவது:

Advertisement

Advertisement

கைதாகியுள்ள நபர் நடிகர் சைஃப் அலி கான் வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கடந்த 16-ஆம் தேதி சென்றுள்ளார். 30 வயதான அந்த நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், முகம்மது ஷரிஃபுல் இஸ்லாம் ஷேஸாத் என்ற இயற்பெயர் கொண்ட அவர், ‘விஜய் தாஸ்’ என்று பெயர்மாற்றம் செய்து கொண்டு கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் வசித்து வந்துள்ளார்.

அவரிடம் மத்திய தரப்பில் வழங்கப்படும் அரசு ஆவணங்கள் ஏதுமில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன் அவர் மும்பை வந்தடைந்து இங்குள்ள வீட்டு வேலை பணி சார் ஆள்களை நியமிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார்.

நீதிமன்றத்தில் அந்த நபர் ஆஜர்படுத்தப்பட்டபின் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றத்தில் வாதிடப்படும் என்றார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரச வம்சத்தை சேர்ந்தவருமான பட்டோடியின் மகனான சைப் அலி கான் ஹிந்தியில் நன்கு அறியப்பட்ட நடிகராவார். பிரபல நடிகை கரீனா கபூர் அவரது இரண்டாவது மனைவியாவார். அவரது மகள் சாரா அலி கானும் நடிகையாக திரைத்துறையில் கால்பதித்துள்ளார்.

இந்த நிலையில், சைப் அலி கான் வீட்டுக்குல் நுழ்ந்த நபரை அவர் கையும் களவுமாகப் பிடித்து விசாரித்தபோது அந்த நபர் கத்தியால் சைப் அலி கானை குத்திvஇட்டு தப்பிவிட்டார்.

இதில் சைஃப் அலி கான் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் விழுந்த சைஃப் அலி கான் அதன்பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிர் தப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments