FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு!

பிரதமர் மோடி- இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ சந்திப்பு.

Updated On : 25 ஜனவரி 2025, 6:25 pm IST
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ உடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

இந்தோனேசியா - இந்தியா இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர் இன்று சந்தித்தார்.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தோனேசியாவை முக்கிய பங்குதாரராகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, "சர்வதேச சட்டத்திற்குட்பட்டு கடல்வழிப் போக்குவரத்து சுதந்திரமாக செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்’ என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

மேலும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு இந்த விவகாரத்தில் உலகளாவிய நாடுகளின் அக்கறை குறித்தும் அவர் பேசினார்.

கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக குற்றத் தடுப்பு, தேடுதல் மற்றும் மீட்பு, திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தோனேசியா - இந்தியா இடையே ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் கூட்டாகச் செயல்பட ஒப்புக் கொண்டுள்ள நிலையில், "எங்கள் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விரிவான விவாதங்களை நடத்தினோம்.

நிதிசார் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இணையம் சார்ந்த விஷயங்கள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதில், கடல்சார் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றிற்கு இரு தரப்பினரும் முக்கியத்துவம் அளித்துள்ளோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையை “மிகவும் வெளிப்படையானது” என்றூ குறிப்பிட்ட இந்தோனேசிய அதிபர், சுபியந்தோ "இந்தியாவுடனான பொருளாதார உறவை மேம்படுத்த வேண்டும் என எங்கள் நாட்டின் அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

இந்தோனேசியா பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர் ஆனதற்கு இந்தியா சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments