FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீதி விசாரணைக் குழு பிரயாக்ராஜில் ஆய்வு!

கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை நீதித்துறை விசாரணைக்குழு ஆணையம் ஆய்வு..

Updated On : 31 ஜனவரி 2025, 3:26 pm IST
மகா கும்பமேளா - Center-Center-Delhi
பகிர்:

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட நீதி விசாரணைக்குழு ஆணையம் பிரயாக்ராஜ் சென்றடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜன.29 அன்று மௌனி அமாவாசையையடுத்து திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடக் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாகவும் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்ததாகவும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையில், முன்னாள் காவல்துறை இயக்குநர்(டிஜிபி) வி.கே குப்தா மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.கே சிங் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

புதன்கிழமை கூட்ட நெரிசலில் ஏற்பட்ட பலியானதையடுத்து இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு விசாரணை மேற்கொள்ள பிரயாக்ராஜ் வந்துள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறது.

இந்த ஆணையம் விசாரணையை முடிக்க ஒரு மாதக்காலம் எடுக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதை விரைந்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குழு தலைவர் ஹர்ஷ் குமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கட்டுக்கடங்காத கூட்டம்..

மௌனி அமாவாசையான அன்று தடைகளை மீறிய நிலையில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் நெரிசல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments