முகப்பு
இந்தியா

ஓய்வுக்குப் பிறகு அரசுப் பதவி எதையும் ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி கவாய்

ஓய்வுக்குப் பிறகு அரசுப் பதவி எதையும் ஏற்க மாட்டேன் என தலைமை நீதிபதி கவாய் அறிவிப்பு...

Updated On : 27 ஜூலை 2025, 1:10 am IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் - PTI
பகிர்:

‘பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்கமாட்டேன்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் திட்டவட்டமாக தெரிவித்தாா்.

ஆந்திர மாநிலம் அமராவதியில் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மறைந்த டி.ஆா்.கில்டா நினைவு இணைய நூலகம் தொடக்க நிகழ்ச்சியில் பேசும்போது இக் கருத்தை அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, ‘பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்கமாட்டேன் என்பதை பல சந்தா்ப்பங்களில் தீா்மானமாக நான் தெரிவித்துள்ளேன். ஓய்வுக்குப் பிறகு சட்ட ஆலோசனை மற்றும் மத்தியஸ்த சேவையை மேற்கொள்ள உள்ளேன்’ என்று அவா் கூறினாா்.

Advertisement

Advertisement

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த மே 14-ஆம் தேதி பி.ஆா். கவாய் (64) பதவியேற்றாா். இதன்மூலம், பட்டியலினத்தைச் சோ்ந்த இரண்டாவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவா் பெற்றாா். இவா் வரும் நவம்பா் 23-ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ளாா்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் பலா் பணி ஓய்வுக்குப் பிறகு மாநிலங்களவை எம்.பி.க்களாகவும், மாநில ஆளுநா்களாகவும், மத்திய தீா்ப்பாயங்களின் தலைவா்களாகவும் பணியமா்த்தப்பட்டு வரும் நிலையில், தலைமை நீதிபதி பி.ஆா். கவாயின் கருத்து கவனம் பெற்றுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments