FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கரோனா: பீதியடைய வேண்டாம், விழிப்புடன் இருப்போம் - மமதா

கரோனா பீதியை உருவாக்காமல் எச்சரிக்கையுடன் இருப்போம்..

Updated On : 9 ஜூன் 2025, 6:23 pm IST
மமதா பானர்ஜி
பகிர்:

மேற்கு வங்கத்தில் கரோனா நிலைமையைக் குறித்து பீதியடைய வேண்டாம், ஆனால் விழிப்புடன் இருக்குமாறு அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸின் மற்றொரு வெடிப்பைச் சமாளிக்க மாநிலத்தில் தயார் நிலையை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் தலைமை தாங்கினார் மமதா பானர்ஜி.

இதுதொடர்பாக மமதா பானர்ஜி கூறுகையில்,

Advertisement

Advertisement

மாநிலத்தில் கரோனா நிலைமை குறித்து மக்கள் பீதியடைய எந்த காரணமும் இல்லை. ஆனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கரோனா பாதிப்பு குறித்து தயார் நிலையை நாங்கள் கணக்கெடுத்தோம். தொற்று ஒருபோதும் மீண்டும் வராது என்று நம்புகிறோம். மக்கள் பீதியை உருவாக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நுரையீரல், மார்பு தொடர்பான தொற்று அல்லது வேறு சில பிரச்னைகள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில நேரங்களில் வயது மூப்பும் ஒரு பிரச்னையாகலாம்.

இப்போதெல்லாம், இருமல், சளி ஏற்பட்டாலும், கரோனா என்று கருதத் தொடங்குகிறோம். அரசு மக்களுடன் உள்ளது, தொடர்ந்து இருக்கும், அரசு நடத்தும் மருத்துவமனைகளில் தேவையான உள்கட்டமைப்புகள் உள்ளன. நிலைமை மோசமாக இல்லாததால் நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது ஒரு வகையான இன்ஃப்ளூயன்ஸாவைத் தவிர வேறில்லை. மழைக்காலம், குளிர்காலத்தில் இருமல் சளி இருப்பதை நாங்கள் காண்கிறோம், இது மிகவும் பொதுவானது என்று அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த், சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள், கொல்கத்தா நகராட்சி உள்பட குடிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்துத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின்படி, மேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை காலை வரை 747 செயலில் உள்ளனர். ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments