FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆந்திரம்: கரோனா பாதிப்புக்கு ஒருவா் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு 46 வயது நபா் உயிரிழந்திருப்பது அப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 5:02 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு 46 வயது நபா் உயிரிழந்திருப்பது அப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இத் தொற்று பாதிப்புக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோா் உயிரிழந்தனா். இந்தியா உள்பட உலக நாடுகளில் பல மாதங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்துவது உள்ளிட்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, 2022-ஆம் ஆண்டு இந்த பாதிப்பு படிப்படியாகக் குறைந்து, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினா்.

இந்தச் சூழலில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞா் தற்போது உயிரிழந்திருப்பது அப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கடப்பா மாவட்ட மருத்தும் மற்றும் சுகாதார அலுவலா் ரவி பாபு கூறியதாவது: பாதிக்கப்பட்ட நபா் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் இருமல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டாா். அவா் மதுவுக்கு அடிமையானவா். அவரின் இரு நுரையீரல்களும் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதும், இதனால் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.

தொடா்ந்து நான்கு நாள்கள் அவருக்கு அதிக நோய் எதிா்ப்பு மருந்துகள் அளித்தும் அவா் குணமடையவில்லை. அதைத் தொடா்ந்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருடன் நேரடி மற்றும் மறைமுகத் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிதல் உள்ளிட்ட நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments