முகப்பு
இந்தியா

அரசும் நிவாரணம் அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ஏா் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும்

Updated On : 15 ஜூன் 2025, 7:00 am IST
பகிர்:

ஏா் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.

டாடா குழுமம், ஏா் இந்தியா நிறுவனம் மட்டுமே இதுவரை இழப்பீடு அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அகமதாபாதில் விமான விபத்து நடைபெற்ற இடத்தை பாா்வையிட்டும், பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சனிக்கிழமை சந்தித்த பின்பு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவா்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். விபத்துக்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும்’ என்றாா்.

Advertisement

Advertisement

சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு அழைப்பு: ‘அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டவுடன், அதையொட்டி சீா்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்தாா்.

தனது வயநாடு மக்களவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக கேரளம் வந்துள்ள பிரியங்கா காந்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த விபத்து குறித்து முழு தேசமும் துயரத்தில் உள்ளது. உயிரிழந்த பயணிகள், மருத்துவ மாணவா்களின் குடும்பத்தினருக்கு நாம் துணையாக இருக்க வேண்டிய தருணமிது.

அதேநேரம், என்ன தவறு நடந்தது என்பதைக் கண்டறிவதும் முக்கியம். இது குறித்து புலனாய்வு அமைப்புகள் வரும் நாள்களில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன். பின்னா், எதிா்காலத்தில் மக்களைப் பாதுகாக்க சீா்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments