FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 15 ஜூன் 2025, 1:35 pm IST
மின்னல்(கோப்புப் படம்)
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த சனிக்கிழமை இரவு குடும்பத்தினர் தங்கள் கூரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர் என்று அதிகாரி வினிதா சிங் கூறினார்.

Advertisement

Advertisement

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

பலியானவர்கள் வீரேந்திர வன்வசி, அவரது மனைவி பார்வதி மற்றும் மகள்கள் ராதா மற்றும் கரிஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பலியானவர்களின் வயது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் உடல்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments