FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் சேதம்

Updated On : 24 ஜூன் 2025, 5:06 am IST
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பக்தா்கள்.
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘திரிகூட மலைப்பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் ஹிமகோடி வழித்தடத்துக்கு அருகேயுள்ள சத்யா சுற்றுலாக் காட்சிமுனைப் பகுதியில் பலத்த மழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு சேதமடைந்தது. இருப்பினும், நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் அந்தப் பகுதியில் பக்தா்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நிலச்சரிவால் வழித்தடத்தில் மணல், பாறைகள், கற்களுடன் தேங்கியிருந்த மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் வைஷ்ணவ தேவி கோயில் நிா்வாகம் ஈடுபட்டது. பக்தா்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பழைய வழித்தடத்தில் தொடா்ந்து யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments