மோசமான வானிலை: அமர்நாத், வைஷ்ணவ தேவி யாத்திரை 2-வது நாளாக நிறுத்தம்!
அமர்நாத், வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை நிறுத்தப்பட்டது தொடர்பாக..
மோசமான வானிலை காரணமாக அமர்நாத் மற்றும் வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரைகள் இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் இமயமலைத் தொடரில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில், ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஏராளமான பக்தா்கள் யாத்திரை மேற்கொள்வர். இவ்வாண்டுக்கான யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், அடுத்த சில நாள்களுக்கு மோசமான வானிலை இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஐம்மு, உதம்பூர், ரம்பானிலிருந்து ஸ்ரீநகர் நோக்கிச் செல்லும் பக்தர்களை ஏற்றிச் செல்லும் எந்தவொரு வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது.
Advertisement
Advertisement
ஜம்மு, கதுவா, சாம்பா, உதம்பூர், ரம்பன் மற்றும் பனிஹால் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு முகாம்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அதேவேளையில், பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் காஷ்மீர் நோக்கிச் செல்வதைத் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை 3.76 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமா்நாத் பனி லிங்கத்தை வழிபட்டுள்ளனர்.
இதேபோல ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு மேற்கொள்ளப்படும் யாத்திரையும், மோசமான வானிலை காரணமாக இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. கத்ரா அடிப்படை முகாமில் யாத்திரை நிறுத்தப்பட்டது குறித்து காவல்துறையினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகளை வெளியிட்டனர்.
கோயிலுக்கான அடிப்படை முகாமும் யாத்திரையின் தொடக்கப் புள்ளியுமான கத்ரா நகருக்கு வந்துள்ள பக்தர்கள், வானிலை சீரடையும் வரை தாங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
At least 930 people have died in Congo's Ebola outbreak, the country's Ministry of Health said
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.