6 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவ தேவி யாத்திரை மீண்டும் தொடக்கம்!
வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை ஜூலை 25(இன்று) மீண்டும் தொடங்கியது.
மோசமான வானிலை காரணமாக கடந்த ஆறு நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை ஜூலை 25(இன்று) மீண்டும் தொடங்கியது.
தெற்கு காஷ்மீரில் இமயமலைத் தொடரில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில், ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஏராளமான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வர். இவ்வாண்டுக்கான யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தொடர்ந்து ஆறு நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேசி யாத்திரை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. வானிலை நிலவரத்தை ஆய்வு செய்து யாத்திரைக்கான பாதை பயணிகளுக்குப் பாதுகாப்பானது என்று அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து யாத்திரை மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தொடர் மழை, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஆகியவற்றின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பத்ரா பகுதியில் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக்காணப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக காஷ்மீரின் காசிகுண்ட் அல்லது உதம்பூர் ஆகிய இடங்களிலிருந்து ராம்பன் நோக்கிச் செல்ல எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பலேசா பகுதியிலும் கனமழை கொட்டியது. இதனால் ஆறுகள், ஓடைகள் மற்றும் வடிகால்களில் நீர்மட்டம் உயர்ந்ததுடன், வீடுகள், பயிர்கள் மற்றும் விவசாய நிலங்களும் சேதமடைந்தன.
தற்போது, வானிலை மேம்பட்ட நிலையில், கோயிலுக்குச் செல்லும் பாதை தற்போது சரிசெய்யப்பட்ட நிலையில், மீண்டும் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
The Shri Mata Vaishno Devi Yatra resumed on Saturday after remaining suspended for six consecutive days due to adverse weather conditions and safety concerns triggered by heavy rainfall in the region.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.