முகப்பு
இந்தியா

விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 256 பேரின் உடல்கள் ஒப்படைப்பு.

Updated On : 24 ஜூன் 2025, 12:01 pm IST
ஏர் இந்தியா விமான விபத்து.
பகிர்:

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சிறிது நேரத்திலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களில் விழுந்து வெடித்துச் சிதறியது.

நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தில் ஒரேயொரு பயணியை தவிர மற்ற அனைவரும் அடையாளம் தெரியாத அளவில் உடல் கருகி உயிரிழந்தனா். பிரிட்டன் குடிமகனான விஷ்வாஸ் குமாா் ரமேஷ் என்ற பயணி மட்டும் லேசான தீக்காயங்களுடன் உயிா் பிழைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Advertisement

இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் பலியான 270 பேரில் 259 பேரின் உடல்கள் மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், வெளிநாட்டினர் உள்பட 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், "இன்றுவரை விமான விபத்தில் பலியானவர்களில் 259 பேரின் உடல்கள் மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 180 பேர், விமானத்தில் பயணிக்காதவர்கள் 19 பேர், வெளிநாட்டினர்கள் 57 பேர் (பிரிட்டன் 49, போா்ச்சுகல் 7, கனடா 1) அடங்குவர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.