ஆந்திரத்தில் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம், சிறை!
இன்று முதல் ஆந்திர அரசு ஆந்திர அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது.
ஹைதராபாத்: வாகனயொட்டிகள் தங்களது விருப்பப்படி போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ஆந்திர உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை அடுத்து, அந்த மாநில அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது.
மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். சாலைகளில் வாகன பந்தயம் அல்லது ஸ்டண்ட் செய்வது போன்றவற்றிற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
முதல் முறை வாகனயொட்டிகளின் பாக்கெட்டை பதம் பார்க்காது என்றாலும் மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறும் போது பெரும் அபராதங்கள் விதிக்கப்படும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுவோறுக்கு விதிக்கப்படும் அபராதம் விவரம்:
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவருக்கு ரூ.1,000 அபராதம்.
மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ.25,000 மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.
சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.1,000 மற்றும் மூன்று மாதம் சிறைத்தண்டனை.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.5,000 அபராதமும், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.
வாகன பயன்பாட்டாளா்கள் வாகனக் காப்பீடு இல்லாதவர்களுக்கு முதல் முறை ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை பிடிபட்டால் ரூ.4,000 அபராதம் விதிக்கப்படும்.
பதிவு புதுப்பித்தல் வரிசையில் இல்லை என்றால் முதல் முறையாக ரூ.2,000 அபராதமும், இரண்டாவது முறையாக ரூ.5,000 விதிக்கப்படும்.
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசினால், முதல் முறை ரூ.1,500 அபராதமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ரூ.10,000 விதிக்கப்படும்.
வேகம், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து சிக்னல் மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
சீருடை அணியாகத ஓட்டுநர்களுக்கு முதல் முறையாக ரூ.150 அபராதமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.
இதையும் படிக்க: சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி இந்தியாவில் அறிமுகம்!