FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குடும்ப பிரச்னை தீர 5 வயது சிறுமியைப் பலியிட்ட தம்பதி: கோவாவில் அதிர்ச்சி!

குடும்ப பிரச்சனை தீரச் சிறுமியைக் கொன்ற தம்பதியினர் பற்றி..

Updated On : 7 மார்ச் 2025, 12:34 pm IST
கோவாவில் அதிர்ச்சி
பகிர்:

கோவாவில் அண்டை வீட்டைச் சேர்ந்த 5 வயது சிறுமியைக் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் வசித்துவருபவர் பாபாசாகேப் அலார்(52) அவரது மனைவி பூஜா(45). தம்பதியினர் மந்திரவாதி ஒருவரிடம் சென்று தங்கள் துயரைப் போக்க வழி கேட்டுள்ளனர். அதற்கு அவர் சில பரிகாரங்களை சொல்லி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், தம்பதியினர் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகே 5 வயது சிறுமி காணாமல் போனதாகப் புகார் அளித்துள்ளதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் சிவராம் வைகங்கர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

வீட்டின் வெளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சோதனை செய்தனர். தம்பதியினர் தங்கியிருந்த வீட்டிற்குள் 5 வயது சிறுமி நுழைந்தது , அதன்பின்னர் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பதும் தெரியவந்தது.

தம்பதியினரை போலீஸார் பிடித்து விசாரித்ததில், குழந்தை இல்லாத தம்பதியினர் மந்திரவாதி ஒருவரிடம் குடும்ப பிரச்னைகள் தீர ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அவர் 5 வயது சிறுமியைக் கொன்று புதைத்தால் பிரச்னைகள் தீரும் என்று கூறியுதாக தம்பதியினர் தெரிவித்தனர்.

இதையடுத்து தங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஐந்து வயது சிறுமியைப் பலியிட முடிவு செய்தனர். தங்களின் குடும்ப பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கையில், சிறுமியைக் கொன்று, உடலை வீட்டின் பின்புறத்தில் புதைத்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக அந்த அதிகாரி கூறினார்.

கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments