FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரள பாஜக தலைவரானார் ராஜீவ் சந்திரசேகர்!

கேரள பாஜக தலைவராக ராஜீவ் சந்திரசேகர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டது பற்றி...

Updated On : 24 மார்ச் 2025, 1:31 pm IST
பகிர்:

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய பாஜக மாநிலத் தலைவா் கே. சுரேந்திரன் தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து, புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் ராஜீவ் சந்திரசேகா் ஞாயிற்றுக்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

இப்பதவிக்கு ராஜீவ் சந்திரசேகா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், கட்சியின் கவுன்சில் கூட்டம் இன்று காலை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இக்கூட்டத்தில் பங்கேற்ற கேரள பாஜகவின் மேலிடப் பாா்வையாளர் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, கேரள மாநிலத்தின் தலைவராக ராஜீவ் சந்திரசேகரன் ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கா்நாடகத்தில் இருந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தோ்வாகியுள்ள ராஜீவ் சந்திரசேகா், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா், நீா் வளம் ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சராக மத்திய பாஜக கூட்டணி அரசில் பொறுப்பு வகித்துள்ளாா்.

பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியுள்ள ராஜீவ் சந்திரசேகா், கடந்த மக்களவைத் தோ்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் தலைவா் சசி தரூரிடம் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments