FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை!

நாளை நடைபெறவுள்ள போர் பாதுகாப்பு ஒத்திகை குறித்து...

6 மே 2025, 11:45 am IST
’ஜம்மு காஷ்மீரின் சா்வதேச எல்லைக் கோட்டில் அமைந்துள்ள ராம்கரில் மக்களுக்காக தயாா்படுத்தப்படும் பதுங்கு குழிகள்.’
பகிர்:

நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை(மே 6) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நடத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

Advertisement

Advertisement

குறிப்பாக, வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்தல்; அண்டை நாட்டில் இருந்து தாக்குதல் நடந்தால் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி என சிவில் பாதுகாப்பு அமைப்புகள், பொதுமக்கள், மாணவா்கள், தனியார் நிறுவனங்களின் பாதுகாவலா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு உரிய பயிற்சி அளித்தல்; தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து மாநிலங்களை உள்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கடைசியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டபோது போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், மீண்டும் நாளை பெறவுள்ளது.

போர் பாதுகாப்பு ஒத்திகையை நடத்த கல்பாக்கம், ஆவடி, மீனம்பாக்கம், மணலி ஆகிய பகுதிகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

இதையும் படிக்க: அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஜராவில்லை என்றால் குற்றச்சாட்டு பதியப்படும்: நீதிபதி எச்சரிக்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments