சென்னை விமான நிலையம் 
இந்தியா

பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்னை வந்தடைந்த மாணவர்கள்!

பஞ்சாப் மாநிலத்திலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் இன்று காலை சென்னை வந்தனர்.

DIN

சென்னை: பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து புறப்பட்ட 5 தமிழக மாணவர்கள் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த மாணவர்களை அவர்களது பெற்றோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், தாங்கள் தங்கியிருந்த இடத்தில் ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும், பாதுகாப்புக் கருதியே அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்ததாகவும், பல மாணவர்கள் தொடர்ந்து சென்னை திரும்பிக்கொண்டிருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு நிலைமை சரியில்லாத காரணத்தால் பஞ்சாபிலிருந்து புறப்பட்டு தழிழகம் வந்துவிட்டோம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பஞ்சாப் கல்லூரிகளில் தங்கி படித்து வருவதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 7 மாணவர்கள் இன்று பிற்பகலில் சென்னை வர உள்ளனர் என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. இந்தியா பதிலடி: செய்திகள் - நேரலை!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லைக் மழை! 10 கோடி பார்வைகளைக் கடந்த சின்மயி மேடைப் பாடல்!

ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

ஆப்கன் நிலநடுக்கம்: 900 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டல்!

ஜார்க்கண்டில் 9 நக்சல்கள் சரண்!

SCROLL FOR NEXT