FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Updated On : 14 மே 2025, 7:37 pm IST
கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் சுக்ரு கெல்லர் பகுதியில் நேற்று (மே 13) சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதியான ஷாஹித் குட்டே மற்றும் வந்துனா மெஹுரா பகுதியைச் சேர்ந்த அத்னான் ஷாஃபி மற்றும் புல்வாமாவைச் சேர்ந்த அஹ்சன் உல் ஹக் ஷேயிக் ஆகியோர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Advertisement

Advertisement

பலியான லஷ்கர் தளபதி ஷாஹித் குட்டேவின் தவறுதலான வழிகாட்டல்களினால் ஏராளமான காஷ்மீர் இளைஞர்கள் அவர்களது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், பலியான மூன்று பயங்கரவாதிகளுக்கும் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அவர்களிடமிருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட மிகப் பெரியளவிலான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments