FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.

Updated On : 31 மே 2025, 5:18 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதன்படி, நாட்டில் தற்போது 3,395 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கேரளத்தில் 1,336 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 467 பேரும், தில்லியில் 375பேரும், குஜராத்தில் 265 பேரும், கர்நாடகத்தில் 234 பேரும், மேற்கு வங்கத்தில் 205பேரும், தமிழ்நாட்டில் 185 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 117 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

சசி தரூர் விளக்கத்தால் பாகிஸ்தானுக்கு கொலம்பியா தெரிவித்த இரங்கல் வாபஸ்

நேற்று ஒரே நாளில் 685 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம் மற்றும் கேரளத்தில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் ஒரு நாளைக்கு முன்பு கரோனாவுக்கு 7 பேர் பலியாகியிருந்தனர்.

கரோனா சிகிச்சை முடிந்து சுமார் 1,435 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments