முகப்பு
இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது சிஎம்எஸ்-03: இஸ்ரோ தலைவர்

எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 நவம்பர் 2025, 6:01 pm IST
இஸ்ரோ வி. நாராயாணன் - படம் - இஸ்ரோ
பகிர்:

எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக இன்று (நவ. 2) விண்ணில் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,400 கிலோ கிலோ எடை கொண்டதால், புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக எடையுடையதாக சிஎம்எஸ்-03 உள்ளது. இது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது,

எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சிஎம்எஸ்-03 அதிக எடையுடைய செயற்கைக்கோள். இதன் பயன்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இன்று அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது.

எல்விஎம் 3 ராக்கெட் மூலம் 100% வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி இஸ்ரோவில் திறன் வாய்ந்த விஞ்ஞானிகளால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றியில் நாம் அனைவருமே பங்கெடுத்து கொண்டாட வேண்டும். செயற்கைக்கோள் விஞ்ஞானிகள் குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் காலம் மிகவும் சவாலானதாக இருந்தது. வானிலை நமக்கு எதிரானதாகவே இருந்தது. இருந்தபோதும் இந்த வெற்றி இஸ்ரோவில் உள்ள ஒவ்வொருவரின் தீவிர முயற்சியால் சாத்தியமாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்விஎம் 3 ராக்கெட்!

summary

Satellite successfully launched: ISRO chief

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments