மகாராஷ்டிரம் இடைத்தேர்தல்: 9 மணி நிலவரம்!
மகாராஷ்டிரம் இடைத்தேர்தல் 9 மணி நிலவரப்படி..
மகாராஷ்டிரத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், 9 மணி நிலவரப்படி பாராமதியில் 8 சதவிகிதம், ரஹுரியில் 6 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையவுள்ளது.
மகராஷ்டிரத்தின் முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார், ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாராமதி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமானது.
Advertisement
Advertisement
அஜீத் பவாரின் மனைவியும், துணை முதல்வரும், என்சிபி தலைவருமான சுநேத்ரா பவார் மற்றும் 22 பிற வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சிவாஜி கார்டிலே காலமானதைத் தொடர்ந்து, ரஹுரி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது. ரஹுரி தொகுதியில் சிவாஜி கார்டிலேவின் மகன் அக்ஷய் கார்டிலே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து என்சிபி (எஸ்பி) வேட்பாளர் கோவிந்த் மொகாடே மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடியைச் சேர்ந்த சந்தோஷ் சால்கே ஆகியோர் களத்தில் உள்ளனர்.
Eight per cent voter turnout was recorded in Baramati and six per cent in Rahuri in the first two hours of voting on Thursday as polling was underway for bypolls to the two assembly constituencies in Maharashtra, election officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.