முகப்பு
இந்தியா

தாயகம் திரும்புங்கள்! அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு கடிதம்!

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் மனம் திறந்த கடிதம் பற்றி

Updated On : 27 ஏப்ரல் 2026, 12:26 pm IST
ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு - ENS
பகிர்:

இந்திய தொழில்நுட்பத் துறையில் புரட்சி செய்து வரும் ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இன்று அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு மனம் திறந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்.

அமெரிக்காவில் வாழும் உங்களில் பலருக்கு இதைப் பற்றி சிந்திப்பது கடினமாக இருந்தாலும், தயவுசெய்து தாயகம் திரும்புங்கள். பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவை என்று ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவில் தற்போது, அந்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைக்கு ஏற்ப, பல முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

எச்-1பி விசா முறையில் மாற்றம், கட்டுப்பாடு, அமெரிக்க வேலையில் வெளிநாட்டினரை அமர்த்துவதற்கு எதிரான பல கட்டுப்பாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு பிறப்பித்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், 37 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரத நாட்டின் தரமான கல்வி மற்றும் கலாசாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவுக்கு வந்தீர்கள். நீங்கள் மகத்தான வெற்றியை அடைந்தீர்கள். அமெரிக்கா நமக்கு நல்லதையே செய்தது. அதற்காக நாம் நன்றியுடன் இருக்க வேண்டும் - நன்றியுணர்வே நம் நாட்டின் வழி.

ஆயினும் இன்று, கணிசமான எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் - பெரும்பான்மையினர் இல்லாவிட்டாலும், அதற்காக மிகக் குறைந்தவர் என்றும் சொல்ல முடியாதவர்கள் - இந்தியர்கள் அமெரிக்க வேலைகளைப் பறித்துக்கொள்கிறார்கள் என்றும், அமெரிக்காவில் நமது வெற்றி நியாயமற்ற முறையில் சம்பாதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள்.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், அடுத்த தேர்தல் இதை சரிசெய்துவிடும் என்று நினைக்கலாம், ஆனால் உங்கள் எண்ணம், நம் பாரதிய நாட்டின் நாகரிகத்தையே வெறுப்பவர்களுக்கும், பொதுவாக நாகரிகத்தையே வெறுப்பவர்களுக்கும் இடையேதான்.

இதற்கிடையில், இப்போதும் இருக்கும் உண்மை, எதிர்காலத்திலும் உண்மையாக இருக்கப்போவதுமான ஒரு விஷயம்: உலகெங்கிலும் இந்தியர்கள் பெறும் மரியாதை என்பது, இந்தியாவின் நிலையையே சார்ந்திருக்கும். இந்தியா ஏழையாகவே நீடித்தால், மிகப் பரிதாபத்துடன் நமக்கு அறநெறி போதனைகள்தாக் கிடைக்கும். நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பவர்கள் வேறுபட்ட அறநெறிப் போதனைகளை வழங்குவார்கள். இவ்விரண்டையும் நாம் மரியாதை என்று குழப்பிக்கொள்ளக் கூடாது.

இன்றைய உலகில் மரியாதை, செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை ஒரே அடிப்படையிலிருந்துதான் வருகின்றன: அது ஒரு நாட்டின் தொழில்நுட்பத் திறமை. அந்தத் திறமையை அடைவதற்குத் தேவையான அறிவுத்திறனை இந்தியா உருவாக்குகிறது, ஆனால் வருந்தத்தக்க வகையில், அந்தத் திறமையின் பெரும்பகுதியை, குறிப்பாக அமெரிக்காவுக்கு, நாம் ஏற்றுமதி செய்துவிடுகிறோம். இந்தியாவில் அந்தத் திறமையை நாம் வளர்க்கும்போது, ​​நமது நாட்டின் மக்கள் பலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.

உங்களில் பலருக்கு இதைப் பற்றி சிந்திப்பது கடினமாக இருந்தாலும், தயவுசெய்து தாயகம் திரும்புங்கள். பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவை. நமது பரந்த இளைஞர் சமுதாயத்தை செழிப்பின் பாதையில் வழிநடத்த, பல ஆண்டுகளாக நீங்கள் பெற்ற தொழில்நுட்பத் தலைமைத்துவம் அவர்களுக்குத் தேவை. ஒரு சமுதாயப் பணி என்ற ஆர்வத்துடன் இதைச் செய்வோம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

summary

About Zoho founder Sridhar Vembu's open letter to Indians living in the US

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.