எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை: ராஜ்நாத் சிங்
பயங்கரவாதத்திற்கு எதிராக என்றுமே இரட்டை நிலைப்பாடு இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளது குறித்து...
பயங்கரவாதத்திற்கு எதிராக என்றுமே இரட்டை நிலைப்பாடு இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஏப். 28) தெரிவித்தார்.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பான புகலிடங்கள் வழங்கும் அமைப்புகள், நிறுவனங்கள், நாடுகளுக்கு எதிராக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கஜகஸ்தான் தலைநகர் பிஷ்கெக் பகுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு இன்று (ஏப். 28) நடைபெற்றது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஹா ஆசிஃப் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
''பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பான புகலிடங்களை வழங்கும் நாடுகள், நிறுவனங்கள், வலையமைப்புகளுக்கு எதிராக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பிராந்திய பாதுகாப்புத் துறையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பயங்கரவாதத்தின் மையங்கள் நியாயமான தண்டனைகளில் இருந்து இனி தப்ப முடியாது என்பதை இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்தது'' எனக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய ராஜ்நாத் சிங், ''பயங்கரவாதத்திற்கு எந்த தேசியமும் இல்லை, இறையியலும் இல்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நம்பகத்தன்மைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பதில்களாக இல்லாமல், தொடர்ச்சியான நடவடிக்கைகளாக இருக்கும்'' எனக் குறிப்பிட்டார்.
No place for double standards for terror epicentres Rajnath Singh at SCO
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.