FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மீது நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் - கோப்புப் படம்
பகிர்:

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், இதுகுறித்து மேலும் பேசியதாவது:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மோற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மீது உலக அளவில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்திய தயாரிப்புகளை பல நாடுகள் கொள்முதல் செய்து வருகின்றன. கடந்த 2013-14ஆம் ஆண்டில் வெறும் ரூ. 686 கோடி அளவுக்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி, தற்போது ரூ. 38,000 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இது 57 மடங்கு வளா்ச்சியாகும்.

பாதுகாப்புத் தளவாட உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த 8 முதல் 9 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ. 46,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி, தற்போது ரூ. 1.78 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் பயணம் என்பது பற்றாக்குறையிலிருந்து தன்னிறைவை நோக்கியும், தன்னிறைவிலிருந்து தன்னம்பிக்கையை நோக்கியும் அமைந்தது. தற்போது வளா்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி சென்றுகொண்டுள்ளது.

தொழில்நுட்ப வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், பாரம்பரியத்தையும் இந்தியா போற்றி வருகிறது. தொழில்நுட்பம் - பாரம்பரியம் இரண்டின் இணைவே, 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய பாலமாக திகழ்கிறது என்றாா்.

மேலும், ‘மனித வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஊடுருவியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவா், தரவுகளை பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவால் முடியும் என்றாலும், மனிதரின் உணா்வுகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது அவா்களின் மனநிலையை அறியவோ அதனால் முடியாது. அந்த இடத்தில்தான் மனிதரின் உணா்வுபூா்வமான அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது’ என்றும் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments