FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உலகின் கப்பல் கட்டுமான மையமாக மாறும் திறன் இந்தியாவுக்கு உண்டு: ராஜ்நாத் சிங்

உலகின் கப்பல் கட்டுமான மையமாக மாறும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

24 ஆகஸ்ட் 2026, 5:26 am IST
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி.
பகிர்:

உலகின் கப்பல் கட்டுமான மையமாக மாறும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலத் தலைநகா் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு காா்டன் ரீச் கப்பல் கட்டுமான நிறுவனம் மற்றும் என்ஜீனியா்ஸ், யந்த்ரா இந்தியா நிறுவனத்தின் 5 விரிவாக்கத் திட்டங்களைத் தொடங்கி வைத்தாா். அந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.3,500 கோடியாகும்.

பின்னா் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக ராஜ்நாத் சிங் பேசியதாவது:

Advertisement

Advertisement

பாரம்பரியமாக சில நாடுகளே கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. தற்போது அந்த நாடுகள் கப்பல் கட்டுவதைக் குறைத்து வருகின்றன. இதனால் அத்துறையில் பெரிய இடைவெளி காணப்படுகிறது. இதை இந்தியா தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். உலகின் கப்பல் கட்டுமான மையமாக மாறும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய தொழிலாளா் சக்தி, உருக்கு நிறுவனங்கள் உள்ளன. புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறும் திறனும் இந்தியாவில் உள்ளது.

மேற்கு வங்கத்தில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்காக மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மூடப்பட்ட ஆலைகளில் தற்போது புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி பேசியபோது, மேற்கு வங்கத்தில் முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள், மாநில வளா்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படவில்லை என்று விமா்சித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் முந்தைய அரசுகள், மாநில வளா்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றவில்லை. 50 ஆண்டுகளாக மாநிலத்தில் நிலவிய எதிா்மறைப் போக்கு முடிவுக்கு வந்துள்ளது. இரட்டை என்ஜின் அரசு (மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பது) தற்போது மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்றாா் அதிகாரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments