இளைஞர்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள்: விமர்சனங்களுக்கு கங்கனா பதில்!
தன்னை விமர்சிக்கும் நோக்கில் தனது திரைப்படக் காட்சிகளைச் சமூக ஊடகங்களில் பகிர்வதை பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கண்டித்துள்ளார்.
தன்னை விமர்சிக்கும் நோக்கில் தனது திரைப்படக் காட்சிகளைச் சமூக ஊடகங்களில் பகிர்வதைக் கண்டித்துள்ள நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத், இதுபோன்ற பதிவுகள் இளைஞர்களைத் தவறாக வழிநடத்தக்கூடும் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டிருந்த கங்கனா, இளைஞர்களின் போராட்டக் காட்சிகள் வாந்தி வரவழைப்பதைப் போன்று இருந்ததாகவும், அவர்கள் சாக்கடையைப் போன்ற தலைமுறையினர் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர்களைப் பார்க்க அருவருப்பாக உள்ளது என்றும் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்தக் கருத்துகளுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு எதிர்வினையாற்றிய சமூக ஊடகவாசிகள், கங்கனா நடித்த திரைப்படங்களின் காட்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அவர் இடம்பெற்ற காட்சிகளைப் பகிர்ந்து, அவரது விமர்சனங்களைக் கேள்விக்குள்ளாக்கினர்.
Advertisement
Advertisement
அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "நான் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்று நடித்த திரைப்படக் காட்சிகளையும், எனது உதவியாளர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சூழ நான் கலந்துகொண்ட உயர்தர திரைத்துறை நிகழ்வுகளின் காட்சிகளையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்.
இதுபோன்ற விடியோக்களைக் காட்டி சாலைகளிலோ, பள்ளி நிகழ்ச்சிகளிலோ அல்லது மோசமான கிளப்களிலோ ஒரு பெண்ணால் அதேபோன்று செய்யமுடியும் என்று பதின் வயதினரை நம்பவைக்க முயற்சிக்கிறீர்களா? இவை இரண்டும் ஒன்றா?
இளைஞர்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள். இவை இரண்டும் ஒன்றல்ல. மற்றவர்களின் குழந்தைகளை இன்று நீங்கள் தவறாக வழிநடத்தினால், நாளை அது உங்களுக்கும் நடக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
Don't mislead the youth: Kangana responds to criticisms!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.