FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆதங்கம்

எங்களை துரத்துவதை நிறுத்துங்கள் என்று மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:29 pm IST
பகிர்:

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டத்தின்போது பிரதமர் மோடி குறித்து மோசமாக பேசிய 15 வயது சிறுமியின் தாய், தொடர்ச்சியாக எங்களுக்கு வந்த துன்புறுத்தல் காரணமாக நாங்கள் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு, கணவரை இழந்த பெண், தன்னுடைய வாடகை வீட்டை காலி செய்துகொண்டு 15 வயது மகளுடன் வெளியேறியிருக்கிறார்.

பத்தாம் வகுப்புப் படிக்கும் தங்கள் மகள், போராட்டத்தில் பங்கேற்ற பிறகு, காவல்துறையும், முன்பின் தெரியாதவர்களும் வீட்டுக்கு வந்து தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர்.

Advertisement

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி குறித்து மோசமான கருத்துகளைக் கூறியதற்கு என் மகள் மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆனாலும் எங்களுக்கு எதிரான துன்புறுத்தல் குறையவில்.

நான் என் மகளை தனியாக வளர்த்து வருகிறேன், 2019 சாலை விபத்து ஒன்றில் கணவர் இறந்துவிட்டார். அது முதல், நான், மகள், மகன் கணவரின் பெற்றோர் வீட்டில்தான் வாழ்ந்து வந்தோம். ஆனால், இப்போது காவல்துறையும் அடையாளம் தெரியாதவர்களும் வந்து துன்புறுத்தும்போது எப்படி அங்கே தொடர்ந்து வாழ முடியும். தயவு கூர்ந்து, எங்களை துரத்துவதை காவல்துறையும் மக்களும் விட்டுவிட வேண்டும் என்று கெஞ்சியிருக்கிறார்.

தில்லி ஜந்தர் மந்தரில் நடந்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சிப் போராட்டத்தின் போது பிரதமர் மோடி குறித்து மோசமான கருத்துகளை வெளியிட்டு அது விடியோவாக வெளியாகியிருந்தது.

பிறகு, தன்னுடைய செயலுக்கு வருந்துவதாக அந்தப் பெண் பேசிய விடியோ வெளியிட்டிருந்தார். அப்போதே, அவரை காவல்துறை மற்றும் சிலர் மிரட்டி துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

இதனை உறுதி செய்யும் வகையில்தான் தற்போது தங்களது வீட்டை விட்டே அவர்கள் வெளியேறியிருப்பது குறித்து தாய் தெரிவித்திருக்கிறார்.

summary

Stop hounding us mother of 15 year girl

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments