நடுவானில் குலுங்கிய தில்லி விமானம்! பயணிகள் காயம்!
தில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலையில் சிக்கியது பற்றி...
மோசமான வானிலை காரணமாக தாய்லாந்தில் இருந்து தில்லி வந்த விமானம் நடுவானில் குலுங்கியதால் பயணிகல் காயமடைந்தனர்.
தாய்லாந்து நாட்டின் பூக்கெட்டிலிருந்து தில்லி விமான நிலையம் நோக்கி செவ்வாய்க்கிழமை காலை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியாவின் ஏஐ2379 விமானம், மோசமான வானிலை காரணமாக நடுவானில் திடீரென்று குலுங்கியது.
இதன்காரணமாக தரையிறங்குவதற்கு முன்னதாக, ஏர் இந்தியா விமானம் தனது உயரத்தை இழந்தது. இருப்பினும், விமானத்தை பத்திரமாக விமானிகள் தரையிறக்கினர்.
Advertisement
Advertisement
தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியவுடன் காயமடைந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 10 பயணிகள், 2 விமான ஊழியர்கள் காயமடைந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது:
”ஆகஸ்ட் 4 அன்று பூக்கெட்டிலிருந்து தில்லி வந்த ஏஐ2379 விமானம், மோசமான வானிலை காரணமாக குலுங்கியது. இதனால், உயரத்தை இழக்க நேரிட்டது. இருப்பினும் தில்லியில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதுவரை யாருக்கும் படுகாயங்கள் ஏற்படவில்லை. சிறிய காயங்கள் ஏற்பட்ட பயணிகள், பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக விமான நிலைய மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம். இதுதொடர்பான விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
Delhi-bound flight turbulence mid-air! Passengers injured!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.