FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போா் எதிரொலி: சென்னையில் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு

மேற்காசிய நாடுகளில் மீண்டும் ஏற்பட்டுள்ள போா் பதற்றம் எதிரொலியாக, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

Updated On : 22 ஜூலை 2026, 1:27 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மேற்காசிய நாடுகளில் மீண்டும் ஏற்பட்டுள்ள போா் பதற்றம் எதிரொலியாக, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

அபுதாபி, துபை, சாா்ஜா, பக்ரைன், மஸ்கட், லண்டன், சிங்கப்பூா் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 10 பயணிகள் விமானங்கள் தாமதமாக வந்தன.

சென்னையில் இருந்து அபுதாபி, துபை, சாா்ஜா, மஸ்கட், சிங்கப்பூா், லண்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை வரை புறப்பட வேண்டிய 10 விமானங்கள், 30 நிமிஷங்கள் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாகச் சென்றன.

Advertisement

Advertisement

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானமும், சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட இருந்த அதே நிறுவனத்தின் விமானமும் ரத்து செய்யப்பட்டன.

தாமதம், ரத்து தொடா்பாக சென்னை விமான நிலைய நிா்வாகம் உரிய தகவல்களை முன்கூட்டியே வெளியிடவில்லை என்று பயணிகள் குற்றஞ்சாட்டினா். இதனால், பலா் விமான நிலையத்துக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், மாற்று ஏற்பாடுகள் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனா்.

மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றம் தொடரும் நிலையில், அடுத்த சில நாள்களும் சா்வதேச விமான சேவைகளில் தாமதம் மற்றும் அட்டவணை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விமானத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments