கேரளத்தில் தொடரும் கனமழை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
கேரளத்தில் கனமழை தொடர்ந்து ரெட் அலர்ட் விடுத்துள்ளது பற்றி..
கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், 8 மாவட்டங்களுக்கு அம்மாநில வானிலை அறிக்கை ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
கேரளத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் 100 மி.மீ.க்கும் மேல் மழை பெய்துள்ளது. இந்த நிலையில், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறித்துள்ளது.
இது தவிர, ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கையும்' திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி வரையிலான 21 மணி நேரத்தில் மாநிலத்தின் வட மாவட்டங்களில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தொடர் மழையால் ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களின் தாழ்வான மற்றும் ஆற்றோரப் பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார்டிலும் துப்புரவுப் பணிகளுக்காக அரசு தற்போது ரூ. 25,000 நிதி ஒதுக்கியுள்ளதாகவும், வெள்ள நீர் புகுந்த வீடுகளைச் சுத்தம் செய்யப் பல தன்னார்வ அமைப்புகள் முன்வந்துள்ளனர். மேலும், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும், அது எவ்வித தாமதமும் இன்றி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், அதிகாரிகள் ஆறுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, பத்தனம்திட்டாவில் உள்ள மூழியார், இடுக்கியில் உள்ள கல்லார்குட்டி, இரட்டையாறு மற்றும் லோயர் பெரியாறு, திருச்சூரில் உள்ள பொரிங்கல்கூத்து, கோழிக்கோட்டில் உள்ள குட்டியாடி ஆகிய முக்கிய மின் உற்பத்தி அணைக்கட்டுகளின் நீர்மட்டம் 'சிவப்பு எச்சரிக்கை' நிலையில் உள்ளது.
As heavy rains continued to lash parts of Kerala, the IMD on Tuesday issued a red alert in eight districts of the state for the day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.