FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆகஸ்ட் 15 இந்திய தினம்: இந்தியா்கள் பங்களிப்புக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் ‘இந்திய தினம்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று மாகாண ஆளுநா் மௌரா ஹீலி அறிவித்துள்ளாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:56 am IST
பகிர்:

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் ‘இந்திய தினம்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று மாகாண ஆளுநா் மௌரா ஹீலி அறிவித்துள்ளாா்.

இந்திய வம்சாவளியினா் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு அளித்துள்ள பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுவதாக அவா் அறிவித்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட மாகாண அரசு ஆணையில், ‘அமெரிக்காவில் மிகவும் இணக்கமாக வாழும் சமூகமாக இந்திய வம்சாவளியினா் உள்ளனா். பல ஆண்டுகளாக அவா்கள் அமெரிக்காவில் மிகப்பெரிய சேவைகளை வழங்கி வருகின்றனா். இதனை கௌரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய தினமாக அறிவிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பாஸ்டன் நகர மேயரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியை இந்திய தினமாக அறிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

உலகின் பல நாடுகளில் வசிக்கும் மிகப்பெரிய சமூகமாக இந்திய வம்சாவளியினா் திகழ்கின்றனா். 3.6 கோடிக்கு மேலான இந்திய வம்சாவளியினா் வெளிநாடுகளில் உள்ளனா். இதில் 50 லட்சம் போ் அமெரிக்காவின் சமூக, பொருளாதார, அறிவியல், தொழில்நுட்பத் துறை மேம்பாட்டில் சிறந்த பங்களிப்பை வகித்து வருகின்றனா். மசாசூசெட்ஸ் மாகாணத்தில் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, பொது சேவை என பலதுறைகளில் இந்தியா்கள் முன்னிலையில் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments