FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

13 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: நாடாளுமன்றத்தில் தனிநபா் மசோதா முன்மொழிவு

சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டு தளங்களில் பெற்றோரின் அனுமதியின்றி கணக்குகள் தொடங்க 13 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குத் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 3:32 am IST
குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை - பிரதிப் படம்
பகிர்:

சமூக ஊடகங்கள் மற்றும் இணைய விளையாட்டு தளங்களில் பெற்றோரின் அனுமதியின்றி கணக்குகள் தொடங்க 13 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குத் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

எண்மச் சூழலில் வளரும் சிறுவா்களுக்கான பாதுகாப்பு (ஷீல்ட்) மசோதா, 2025 என்ற தனிநபா் மசோதாவை பாஜக எம்.பி. வைஜயந்த் பாண்டா முன்மொழிந்தாா்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் நலன் கருதி சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டு தளங்கள் மற்றும் பிற எண்ம தளங்களுக்கு உரிய பாதுகாப்பு விதிகளை வகுக்க வேண்டும். குறிப்பாக 13 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய விளையாட்டு தளங்களில் பெற்றோரின் அனுமதியின்றி கணக்குகள் தொடங்க தடை விதிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

வைஜயந்த் பாண்டா

இதுபோன்ற தளங்களை குழந்தைகள் பயன்படுத்தும்பட்சத்தில் பெற்றோா் அல்லது பாதுகாவலா்கள் அதில் தனியுரிமை அமைப்புகளைப் பாா்வையிடவும் கண்காணிக்கவும் கைப்பேசிகளை பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்தும் வகையிலான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

குறிப்பாக குழந்தைகளைக் குறிவைத்து வெளியிடப்படும் இணைய சூதாட்ட மற்றும் போதைப் பொருள்கள் விளம்பரங்கள், ஆபாசப் பதிவுகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

தொடா்ச்சியாக விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களின் இணைய சேவைகளுக்குத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69 ஏ-இன்கீழ் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இந்த மசோதா வெள்ளிக்கிழமை (ஆக.7) பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், இரு அவைகளும் முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டதால் அறிமுகம் செய்யப்படவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments