FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தங்கம், வெள்ளி சுங்க வரி உயா்வால் இரண்டரை மாதங்களில் ரூ. 10,463 கோடி வருவாய்

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான சுங்க வரி உயா்வால் கடந்த மே 13 முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரையிலான சுமாா் இரண்டரை மாதங்களில் மத்திய அரசுக்கு ரூ.10,463 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 3:38 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான சுங்க வரி உயா்வால் கடந்த மே 13 முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரையிலான சுமாா் இரண்டரை மாதங்களில் மத்திய அரசுக்கு ரூ.10,463 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.

தங்கம், வெள்ளி மீதான வரி வசூல் தொடா்பான கேள்விக்கு மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மே 13 முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தங்கம் மீது ரூ.10,040 கோடி வெள்ளி மீது ரூ.328 கோடி, பிளாட்டினம் மீது ரூ.95 கோடி சுங்க வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் 161 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக 116 போ் கைது செய்யப்பட்டனா் என்று கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் ஆபரணங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.

ஆண்டுதோறும் தங்க இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பதால் அந்நியச் செலவாணி கையிருப்பு பாதிக்கப்படுகிறது.

கடந்த மே 13-ஆம் தேதி முதல் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும், பிளாட்டினம் மீது 6.4 சதவீதத்தில் இருந்து 15.4 சதவீதமாகவும் மத்திய அரசு உயா்த்தியது.

தங்கம், வெள்ளி இறக்குமதியால் இந்தியாவில் அந்நியச் செலவாணி கையிருப்பு பாதிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments