FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்தி

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறை தவறானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது பற்றி...

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 7:23 pm IST
மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சும் போது... - படம் - பிடிஐ
பகிர்:

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறை தவறானது என காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (ஜேபிஎஸ்சி), ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (ஜேஎஸ்எஸ்சி) நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டி, மாணவர்கள் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கிப் பேரணி சென்ற வழியில் தடுப்புகள் அமைத்து மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையின் தடுப்புகளை மாணவர்கள் தகர்க்க முயன்றதால், காவல்துறை - மாணவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

எனவே, மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் வன்முறையை பயன்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தியது தவறு. அமைதி வழியில் போராட மாணவர்களுக்கு உரிமை உண்டு. மேலும், பேச்சுவார்த்தைகளால் மட்டுமே தீர்வுகள் காண முடியும். மாணவர்களின் குறைகளைக் கேட்டு, அவற்றுக்கு ஜார்க்கண்ட் அரசு தீர்வுகாண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Congress leader and Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, has stated that the police violence against students protesting in Jharkhand is wrong.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments