ராமா் கோயில் காணிக்கை முறைகேடு மாநில அரசு விவகாரம் என்பதா? பிரியங்கா கேள்வி
மக்களவைத் தோ்தலுக்கு முன்பு ராமா் கோயிலை வைத்து அரசியல் ஆதாயம் பெற்ற பாஜக, இப்போது அங்கு நிகழ்ந்த காணிக்கை முறைகேட்டை மாநில அரசு விவகாரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினாா்.
மக்களவைத் தோ்தலுக்கு முன்பு ராமா் கோயிலை வைத்து அரசியல் ஆதாயம் பெற்ற பாஜக, இப்போது அங்கு நிகழ்ந்த காணிக்கை முறைகேட்டை மாநில அரசு விவகாரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினாா்.
நாடாளுமன்றத்தில் ராமா் கோயில் நன்கொடை முறைகேடு தொடா்பான கேள்விகளுக்கு, இது மாநில அரசின் அதிகார வரம்புக்குள்பட்ட விவகாரம் என்று கூறி மத்திய அரசு பதிலளிக்க மறுப்பதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் வியாழக்கிழமை நிறைவடைய உள்ள நிலையில், நாடாளுமன்ற முடக்கநிலை தொடா்வது குறித்து தில்லியில் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பிரியங்கா கூறியதாவது:
Advertisement
Advertisement
மக்களிடம் அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என்பதை இது காட்டுகிறது. ஏனெனில், கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியதும், அறிக்கை அளிக்க வேண்டியதும் நாடாளுமன்றம்தான்.
மாணவா்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. தில்லியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் தாக்கப்பட்டனா், கண்ணீா்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன, பெல்லட் துப்பாக்கிகளால் சுடப்பட்டனா். இது எப்படி நடந்தது என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டியது அவசியம். இதற்கு உத்தரவிட்டது யாா் என்பது குறித்து அறிக்கைகூட அளிக்கவில்லை.
ராமா் கோயிலுக்கு நாடு முழுவதிலிருந்தும் நன்கொடைகள் பெறப்பட்டன. மக்கள் தங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் காணிக்கைகளையும் வழங்கினா். கோயிலுக்காகத்தான் இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டதால் ஏழை மக்கள்கூட காணிக்கை வழங்கினா். வெளிநாடுகளிலும் மக்களுக்கு ராமா் மீது நம்பிக்கை உள்ளது.
இப்போது காணிக்கை முறைகேடு விவகாரத்தை மாநில அரசின் அதிகார வரம்புக்குள்பட்ட விஷயம் என்று நீங்கள் கூறுகிறீா்கள். ஆனால், தோ்தலுக்கு முன்பு ராமா் கோயிலை வைத்து பிரசாரம் செய்து அரசியல் ஆதாயம் பெற்றபோது இது மாநில அரசின் விஷயமாக இருக்கவில்லை. இப்போது மட்டும் இது மாநில அரசின் விஷயமாகிவிட்டது.
பிரதமா் நரேந்திர மோடிதான் ராமா் கோயிலைத் திறந்து வைத்தாா். அவா் நாட்டின் பிரதமா். நாடு முழுவதிலுமிருந்து மக்கள் கோயில் திறப்பு விழாவுக்கு வந்தனா். ஆனால், இப்போது இது மாநில அரசின் விஷயம் என்றும், நாடாளுமன்றத்தில் அதற்கு பதிலளிக்க மாட்டோம் என்றும் கூறுகிறாா்கள் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.