FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் அழைப்பு

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என மோடி அழைப்பு விடுத்திருப்பது குறித்து...

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 3:57 pm IST
பிரதமர் நரேந்திர மோடி - பிடிஐ
பகிர்:

புதுதில்லி: நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் லாபங்களை தாண்டி பெண்களுக்கான உரிமைகளை வழங்க முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் 80 ஆவது சுதந்திர நாளையொட்டி, தில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளில் 'சுயசார்பு'-ஐ ஊக்குவித்து நாட்டை புதிய உயரங்களுக்கு அழைத்து செல்வதற்கு உதவும் நாட்டின் ஏழு சக்திகளாக உற்பத்தித் திறன், விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு சக்தி, பசுமை, நீலப் பொருளாதாரம் மற்றும் இந்தியாவின் மென் சக்தி ஆகியவற்றைக் குறிப்பிட்ட மோடி, நாட்டில் பெண்களைக் கௌரவிக்க, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டின் கொள்கைகளை வடிவமைப்பதில் பங்களிப்பதற்கான வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேலும், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை ஒரு அரசியல் லாபங்களை தாண்டி, அதனை செயல்படுத்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற காரணங்களால் அதனை அமல்படுத்துவதில் தாமதமாகி வருகிறது.

இந்த இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

summary

Prime Minister Narendra Modi has urged all parties to support the implementation of women’s reservation in Parliament and state assemblies without making it a political fight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments