சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்
தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை தொடர்பாக அந்த மருத்துவமனையின் தலைவர் அஜய் ஸ்வரூப் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "சோனியாவின் உடல்நிலை சீராக உள்ளது. வயிறு தொடர்பான நோய்த்தொற்றில் இருந்து சோனியா குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, இதே மருத்துவமனையில் சோனியா கடந்த 9ஆம் தேதி மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். அதற்கு இரு தினங்களுக்கு முன்பு ஹிமாசல பிரதேச மாநிலம், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.