தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்! மருத்துவமனை அறிக்கை
தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை...
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுபற்றி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 2026, செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement
Advertisement
அவரது உடல்நிலை சீராக உள்ளது. பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் தீவிர கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் அவர் தொடர்ந்து இருந்து வருகிறார். அவரது மருத்துவ அளவீடுகள்சீராகவும், நம்பிக்கையூட்டும் வகையிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hospital report for TVK MLA V.S. Babu's health
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.