கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்!
கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
சென்னை திரு.வி.க நகர் மின் மயானத்தில் மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்த வி.எஸ்.பாபு, கடந்த செப். 9-ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட இதய செயலிழப்பால் சிகிச்சைப் பலனின்றி நேற்று (நவ. 20) பிற்பகல் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
Advertisement
Advertisement
வி.எஸ். பாபுவின் உடல் மருத்துவமனையிலிருந்து அவரது பெரம்பூர் இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது. மறைவுச் செய்தி அறிந்ததும், முதல்வர் விஜய் பெரம்பூரில் உள்ள இல்லத்துக்கு நேற்று மாலை வந்து, வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது மகன் சதீஷ், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருந்தார். இன்று மீண்டும் இறுதிச் சடங்கிலும் முதல்வர் விஜய் பங்கேற்றார்.
அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வி.எஸ். பாபு உடலை, முதல்வர் விஜய் தோள்கொடுத்து சுமந்து சென்றார். மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மயானம் வரை எடுத்துச் செல்லும் வாகனத்துக்கு, வி.எஸ். பாபு உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
முதல்வர் விஜய், அமைச்சர்கள், மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் பாபுவின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மயானம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.
அதைத்தொடர்ந்து திரு.வி.க. நகர் மின் மயானத்தில் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
The mortal remains of V.S. Babu, the late TVK MLA for the Kolathur constituency, were cremated on Friday at the electric crematorium in Thiru.Vi.Ka. Nagar, Chennai.