✕
முகப்பு

எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் நாளை (நவ. 20) மாலை நல்லடக்கம்!

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

பகிர்:

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவுக்கு, கடந்த செப். 9-ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி வி.எஸ். பாபு (75), தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று (நவ. 19) பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

Advertisement

Advertisement

இவரது மறைவைத் தொடர்ந்து வி.எஸ். பாபுவின் உடல் மருத்துவமனையில் இருந்து இன்று மாலை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்குச் கொண்டுச் செல்லப்பட்டு, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் வீட்டில் போதிய வசதி இல்லாததால், அவரது உடல் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அருகில் உள்ள தனியார் விளையாட்டு திடலில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது உடல் நாளை (நவ. 20) மாலை 4 மணி அளவில் பல்லவன் சாலையில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

summary

It has been announced that the mortal remains of V.S. Babu, the TVK MLA for the Kolathur constituency, will be laid to rest tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.