✕
முகப்பு

வி.எஸ். பாபு மரணத்தில் சந்தேகம்? காவல்துறையில் புகார்

மறைந்த கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகார் குறித்து...

வி.எஸ். பாபு - கோப்புப் படம்
பகிர்:

மறைந்த கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இணையவழியாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்ததால், தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு (75) தனிக்கவனம் பெற்றிருந்தார்.

இவர் மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வி.எஸ். பாபுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் இணையவழியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வி.எஸ். பாபுவின் மரணத்தின் பின்னணியில் ஏதேனும் சதி இருக்க்கிறதா என விசாரிக்கக் கோரி தேவராஜனின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்க: பாதுகாத்து வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வி.எஸ். பாபுவின் உடல்நலம் குறித்து சட்டபூர்வமாக அளிக்கக் கூடிய தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் தேவராஜன் தான் வழக்கும் தாக்கல் செய்திருந்தார். புதன்கிழமையில் தேவராஜன் வழக்கு தாக்கல் செய்த நிலையில், வியாழக்கிழமையில் வி.எஸ். பாபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

summary

A complaint has been filed with the police expressing suspicion regarding the death of the late Kolathur MLA V.S. Babu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.