கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல்!
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருப்பது குறித்து...
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில், இன்று (நவ. 20) பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது.
பல நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
DMK leader M.K. Stalin has expressed his condolences on the passing of Kolathur MLA V.S. Babu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.