வி.எஸ். பாபுவின் உடல் இன்று மாலை நல்லடக்கம்!
மறைந்த கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுவது குறித்து...
மறைந்த கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல் இன்று (நவ. 19) மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் 70 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை (நவ. 19) மதியம் 2.24 மணியளவில் வி.எஸ். பாபு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலுக்கு முதல்வர் விஜய் உள்பட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வி.எஸ். பாபுவின் உடல் இன்று (நவ. 20) மாலை இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மாலை 4.30 மணியளவில் திரு.வி.க. நகர் தாங்கல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.