குறைந்த வரி செலுத்துவோருக்கான வெளிநாட்டு சொத்து விவரங்கள் வெளிப்படுத்தும் திட்டம்: மத்திய அரசு அறிமுகம்
குறைந்த வரி செலுத்துவோருக்கான வெளிநாட்டு சொத்து விவரங்கள் வெளிப்படுத்தும் திட்டம்: மத்திய அரசு அறிமுகம்
குறைந்த வரி செலுத்துவோரின் வெளிநாட்டு சொத்துகளுக்கு வரி விதிக்கும் புதிய திட்டத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் சனிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘சிறு வரி செலுத்துவோரின் வெளிநாட்டு சொத்து விவரங்களை வெளிப்படுத்தும் திட்டம் (ஃபாஸ்ட்-டிஎஸ்) எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருமான விவரங்களை தாமாக முன்வந்து தாக்கல் செய்பவா்களுக்கு 60 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படவுள்ளது.
ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் இத்திட்டம் அமலாகவுள்ள நிலையில் நிகழாண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை இணைய வழியில் சொத்து விவரங்களை சிறு வரி செலுத்துவோா் தாக்கல் செய்யலாம்.
Advertisement
Advertisement
சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத வெளிநாடுகளில் படிக்கும் மாணவா்கள், இளம் தொழில் வல்லுநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், வேறு இடத்துக்கு மாறிய வெளிநாடு வாழ் இந்தியா்களை (என்ஆா்ஐ) வரி வரம்புக்குள் கொண்டு வருவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி 2026, மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருமானத்தின் மதிப்பில் 30 சதவீதம் வரியாக விதிக்கப்படும். அத்துடன் வரிக்கு நிகரான கூடுதல் தொகையும் விதிக்கப்படுவதால் மொத்த வரி 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இரு வகைப்பாடுகள்: ஃபாஸ்ட்-டிஎஸ்-இன்கீழ் சொத்து விவரங்களை இரு வகைகளாக தாக்கல் செய்யலாம். முன்பு வரிக்கு உட்படுத்தப்படாத கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்து அல்லது வருமானத்தின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியாக இருக்க வேண்டும்.
ரூ.5 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சொத்துகள் அல்லது வருமானம் மீது ஏற்கெனவே வரி விதிக்கப்பட்டு அது வருமான வரி கணக்கில் குறிப்பிடப்படாமல் இருந்தால் ரூ.1 லட்சம் கட்டணத்துடன் வரி விதிக்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்படும் வருமானம் அல்லது சொத்து மீதான மூலதனத் தொகை வருமான வரிச் சட்டம் 1961 அல்லது கருப்புப் பண சட்டத்தின்கீழ் வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் சோ்க்கப்படாது’ எனத் தெரிவிக்கப்பட்டது
Scheme for Disclosure of Foreign Assets for Low-Tax Payers: Central Government Launches Initiative
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.