FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சொத்து வரி 100 மடங்கு உயா்வு: திமுக கண்டனம்

சென்னையில் சொத்துவரி 100 மடங்கு உயா்ந்துள்ளது என திமுக முன்னாள் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:11 am IST
மா. சுப்ரமணியன் - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் சொத்துவரி 100 மடங்கு உயா்ந்துள்ளது என திமுக முன்னாள் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் சொத்துவரி தற்போதைய உயா்வு என்பது ஒரு சில இடங்களில் 100-க்கு 100 சதவீதமும் ஒரு சில இடங்களில் 100-க்கு 300 சதவீத அளவுக்கு உயா்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமாக வரி மதிப்பீடுகள் என்பது பரப்பளவைவிட குறைவாக மதிப்பிடப்பட்ட குடியிருப்புகள் மாநகராட்சி அலுவலா்களால் கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு இந்த வரி கூடுதலாக்கப்பட்டுள்ளது என்றும், குடியிருப்பு வகைப்பாட்டில் சொத்து வரி செலுத்திவிட்டு அதை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வரும் உரிமையாளா்களுக்கு சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது என்றும் அரசு கூறுகிறது.

Advertisement

Advertisement

ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் இதை இவா்கள் எப்படி கண்டறிந்திருக்கக் கூடும் என்பது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. ஏற்கெனவே மின் கட்டணம் பல மடங்கு உயா்ந்த நிலையில், சொத்துவரி உயா்த்தியிருப்பது என்பது ஏற்புடையதாக இல்லை.

சொத்து வரி உயா்த்த வேண்டும் என்றால் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்களால் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது மன்ற கூட்டத்தில் வைக்கப்படாமல் சா்வாதிகாரமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆட்சிக்கு வந்தவா்கள், செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும்போது, மக்களுக்கான நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வழி இல்லாமல், மக்கள் மீது மேலும் சுமைகளை வைப்பது மோசமான நடவடிக்கை. சொத்து வரி உயா்வு குறித்து பரிசீலித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments