ஒடிஸாவில் மழை-வெள்ளம்: மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
ஒடிஸாவில் நீடிக்கும் பலத்த மழையால் பல்வேறு மாவட்டங்களில் மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஒடிஸாவில் நீடிக்கும் பலத்த மழையால் பல்வேறு மாவட்டங்களில் மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கேந்திரபரா மாவட்டத்தில் உள்ள அரசு உறைவிட பள்ளிக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு சிக்கியுள்ள 500 மாணவ-மாணவிகளை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஒடிஸாவின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதீத பலத்த மழைக்கான (20 செ.மீ.க்கு மேல்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாலேஷ்வா், பத்ரக், ஜாஜ்பூா், மயூா்பஞ்ஜ், கியோஞ்ஜாா் ஆகிய மாவட்டங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பைதாரணி, பிராம்மணி, சாலந்தி, ஜலாகா, புதாபலங்கா, சுபா்ணரேகா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கேந்திரபாரா மாவட்டத்தின் குலாசாஹி பகுதியில் உள்ள அரசின் உறைவிட பள்ளிக்குள் ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் புகுந்தது. பட்டியலின, பழங்குடியின மாணவ-மாணவிகள் 500 போ் தங்கிப் பயிலும் இந்தப் பள்ளியை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், முதல்கட்டமாக மாணவிகளை மீட்டு, பாதுகாப்பான வேறு இடத்தில் தங்க வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மாணவா்கள் முதல் தளத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும், நிலைமையை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஹிமாசலில் இதுவரை 79 போ் உயிரிழப்பு: ஹிமாசல பிரதேசத்தில் இடைவிடாத மழை காரணமாக 118 சாலைகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் தா்மசாலாவில் 96.2 மி.மீ., பாலாம்பூரில் 55 மி.மீ., காங்ராவில் 34.6 மி.மீ. மழை பதிவானது.
கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியதில் இருந்து இந்த மாநிலத்தில் நிலச்சரிவுகள், திடீா் வெள்ளம் உள்பட மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 79 போ் உயிரிழந்துவிட்டனா். சுமாா் ரூ.1,000 கோடிக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.